தமிழக அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பலமுறை கூறி இருந்தார். அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் ஏற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்றும் கூறினார். எனவே விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த்திருந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தார். அவர் நேற்று முதல்வரை சந்தித்து ஆசி பெற்றார்.
இன்று திமுகவின் பளவவிழா மாநாடு காஞ்சிபுரத்தில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். இதைத் தொடர்ந்து நாளை (ஞாயிறு)தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கோட்டை வட்டாரத்தில் கிடைத்த தகவல்படி நாளை காலை பத்தரை மணி அளவில், அல்லது மாலையில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிறார். அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.இது தவிர மேலும் பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படுகிறது.