சென்னை கொளத்தூர் தொகுதியில் அரசு தொடக்கப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, வில்சன் எம்.பி, கலாநிதி வீராசாமி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்து புறப்பட்டபோது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது முதல்வர் கூறியதாவது:
அமைச்சாரவை மாற்றம் இருக்கும். ஆனால் ஏமாற்றம் இருக்காது. அமெரிக்க பயணம் குறித்து டிஆர்பி ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கை தான். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரவை மாற்றம் இருக்கும். ஏமாற்றம் இருக்காது என முதல்வர் கூறியதால், தற்போதைய அமைச்சர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள் என கூறப்படுகிறது. விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.