தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரும் 27ம் தேதி முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அவரது பயணத்துக்கான ஒப்புதல் இந்த அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்படுகிறது.