தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 9ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டு, பட்ஜெட் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். சட்டமன்றம் வரும் மார்ச் 2வது வாரத்தில் கூடுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்று நேரத்தில் சபாநாயகர் அப்பாவு பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கிறார்.