அமைச்சர்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை எனக்கூறி இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில் ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்தார். அதில், இரண்டு அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் மீண்டும் இந்த இரு அமைச்சர்கள் மீதான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றமே நடத்த வேண்டும். குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும். தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கில் வரும் செப்டம்பர் 9ம் தேதி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜராக வேண்டும். செப்டம்பர் 11ம் தேதி தங்கம் தென்னரசு நேரில் ஆஜராக வேண்டும் .
இவ்வாறு தீர்ப்பில் கூறி உள்ளார்.
