தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
தங்கம் தென்னரசு தொழில் துறையில் இருந்து மாற்றப்பட்டு, நிதித்துறை அமைச்சராகி உள்ளார். அவரிடம் மனிதவளம், ஓய்வூதியம் ஆகிய துறைகளும் இருக்கும்.
தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோதங்கராஜ்- பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தித்துறை அமைச்சராக உள்ள மு.பெ. சாமிநாதனிடம் கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த துறை தங்கம் தென்னரசுவிடம் இருந்தது.