நாடாளுமன்ற பொது கணக்கு குழு உறுப்பினர் தேர்தல் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் திருச்சி சிவா எம்.பி. போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விட அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி இன்று திருச்சி சிவா முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையொட்டி எம்.பி. சண்முகசுந்தரமும் இன்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதையொட்டி இன்று காலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.