Skip to content
Home » செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்கள்

செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர்கள்

  • by Senthil

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று  மாலை  ஜாமீனில் விடுதலை ஆனாார். அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அதைத்தொடர்ந்து அவர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது  அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார்.  இரவில்  ஒரு ஓட்டலில் செந்தில்பாலாஜி தங்கினார்.

இன்று காலை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,  மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  சேகர்பாபு,  எம்.எல்.ஏக்கள்  ஸ்ரீரங்கம் பழனியாண்டி, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ்  கரூர் ஜோதிமணி எம்.பி. உள்ளிட்ட ஏராளமான திமுக,  கூட்டணி கட்சி  நிர்வாகிகள்   செந்தில் பாலாஜியை சந்தித்து  உடல்நலம் விசாரித்தனர்.அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!