தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை நேற்றிரவு வெளியிடப்பட்டது. அதில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2 வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு 4-வது இடத்திலும் ஐ.பெரியசாமி 5-வது இடத்திலும் பொன்முடி 6-வது இடத்திலும், ஏ.வ.வேலு 7-வது இடத்திலும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் தொடர்ந்துள்ளன. புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 21-வது இடமும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்திக்கு 22-வது இடமும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு 27வது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்க்கு 30-வது இடமும், டி.ஆர்.பி.ராஜாவுக்கு 33-வது இடமும் அமைச்சரவையில் கடைசி இடம் மனிதவளம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன் அமைச்சர் கயல் விழிக்கு 35-வது இடமும் தரப்பட்டுள்ளது.