தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அமைச்சர் உதயநிதி செகன்னை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் அமைச்சர் நேரு காலை 7.15 மணிக்கு வாக்களித்தார். திருச்சி சிவா எம்.பி. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஜான் வெஸ்ட்ரி பள்ளியில் வாக்களித்தார். மதுரை காக்கைபாடினியார் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்களித்தார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காணக்கிளியநல்லூர் சிறுவயலூர் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் திருச்சி காஜாமியான் மேல்நி்லைப்பள்ளியில் வாக்களித்தார். திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா கறம்பக்குடி அருகே உள்ள தனது கிராமத்தில் வாக்களித்தார். திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன், திருச்சி கேகே நகர் பள்ளியில் வாக்களித்தார்.
திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ இன்று காலை தென்காசி தொகுதியில் உள்ள தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார். அதே வாக்குச்சாவடியில் வைகோவைும் வாக்களித்தார்.