Skip to content
Home » டாக்டர்கள் இல்லாததால்…….மத்திய மந்திரியின் சகோதரர் ஐசியூவில் மரணம்…..

டாக்டர்கள் இல்லாததால்…….மத்திய மந்திரியின் சகோதரர் ஐசியூவில் மரணம்…..

பீகாரின் பாகல்பூர் நகரில் ஆதம்பூர் என்ற இடத்தில் மத்திய மந்திரி அஷ்வினி சவுபேயின் சகோதரர் நிர்மல் சவுபே குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை உறவினர்கள் பாகல்பூரில் உள்ள மாயாகஞ்ச் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை உடனடியாக ஐ.சி.யூ.வில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இந்த நிலையில், சவுபேயின் உறவினர்கள், மருத்துவமனை மீது குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

நிர்மல் சவுபேயின் உறவினரான சந்தன் என்பவர் கூறும்போது, அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், சிகிச்சைக்கு கொண்டு சென்றோம். ஆனால், ஐ.சி.யூ.வில் சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் கூட இல்லை என கூறியுள்ளார். இதுபற்றி மருத்துவமனையின் சூப்பிரெண்டு டாக்டர் அசீம் தாஸ் கூறும்போது, நெருக்கடியான சூழலில், நோயாளி கொண்டு வரப்பட்டார். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது. மூத்த மருத்துவர் அவருக்கு வேண்டிய மருந்துகளை கொடுத்து உள்ளார்.

அதன்பின்பு அவர், ஐ.சி.யூ.வுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் இல்லை என கூறப்படுகிறது. 2 மருத்துவர்களை சஸ்பெண்டு செய்துள்ளேன் என கூறியுள்ளார். டி.எஸ்.பி. அஜய் குமார் சவுத்ரி சம்பவம் பற்றி அறிந்து சென்று, உறவினர்களை சமரசப்படுத்தினார். அவர் கூறும்போது, புகார் எங்களுக்கு கிடைக்கும்போது, விசாரணை செய்வோம். அலட்சியத்துடன் நடந்து கொண்ட யாராக இருப்பினும் நடவடிக்கை எடுப்போம். அமளி ஏற்படுத்தி, மருத்துவர்களை விரட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *