ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஈரோடு 34வது வார்டு முழுவதும் வீதிவீதியாக சென்றுவாக்கு சேகரித்தார். அவருக்கு வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். கை சின்னத்திற்கே வாக்களிப்போம் என மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அமைச்சருடன் திமுகழக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன்,புதுக்கோட்டை முன்னாள்நகரசெயலாளர்க.நைனாமுகம்மது,அறந்தாங்கி நகர்மன்றதலைவர்ஆனந்த், அறந்தாங்கி சண்முகநாதன்,எம்.எம்.பாலு,வடகாடு ந.அண்ணாத்துரை,திமுக செய்திதொடர்பாளர் தரணிரமேஷ் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.