பெரம்பலூர், மாநில இளைஞரணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 46-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டு
வேலா கருணை இல்லத்தில் இருக்கும் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம். மணிவாசகம், நகர 18- வது வார்டு கழக செயலாளர் அஜித் மற்றும் கமல்,சபரி உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உறுப்பினர் எம்.பிரபாகரன், வேலா கருணை இல்லத்தில் இருக்கும் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.