Skip to content

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக இளைஞர்அணிசெயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் 27ந்தேதி பிறந்த 27குழந்தைகளுக்கு
தங்கமோதிரம் வழங்கும் நிகழ்வு நேற்று 28ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா,நகரசெயலாளர்ஆ.செந்தில்,கழகமாநில இலக்கிய அணி துணைத்தலைவர் கவிதைப்பித்தன்,கழகமாநில விவசாய அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், ஆகியோர் பங்கேற்று
குழந்தைகளுக்குதங்க மோதிரங்களை அணிவித்தனர். நிகழ்வில் ஒன்றிய தி.மு.க.செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன் தி.மு.க.துணைச்செயலாளர்மதியழகன்,அறங்காவலர்குழுதலைவர்தவ.பாஞ்சாலன்,இராம.செல்வராஜ், சி.ஆர்.வீ.சித்ரா, கவுன்சிலர் செந்தாமரைபாலு,தொண்டரணிராஜேஷ்,வட்டசெயலாளர்ராமச்சந்திரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!