இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (08.07.2023) சென்னை, மயிலாப்பூர் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் 30 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
கால்கள் பாதிக்கப்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக ரூ. 25,05,000/- (ஸ்கூட்டர் ஒன்றின் விலை ரூ.83,500/-) மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
இந்நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கமல் கிஷோர், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையாக இணை இயக்குநர் திருமதி. ஜெயஷீலா மற்றும் தென் சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. எஸ்.குமார் இருந்தனர்.