மதுரையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டக்கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு துறை தொடர்பாகவும் அவர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம்கேள்வி எழுப்பினார். இந்த ஆய்வின் போது சரிவர பதில் அளிக்காத அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கேட்ட கேள்விக்கு சரிவர பதில் கூறாதது மற்றும் பணியில் தொய்வுடன் செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு சமையலர் ஆகியோர் இடமாற்றம் செய்ப்பட்டுள்ளனர். மேலும் 2 ஹாஸ்டல் வார்டன்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.