இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்க அலுவலகம் கட்டுவதற்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார். தனது சொந்த பணத்தில் இருந்து இந்த நிதியை அவர் கொடுத்தார். அமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு வந்த நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரிடம் அமைச்சர் இந்த நிதியை வழங்கினார். நிதியை பெற்றுக்கொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.