திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டார். இந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது.. சேலம் மாநாடு பிரமாண்டமாக வெற்றி மாநாடாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் டி ஆர் பாலுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கான செலவு முழுவதையும் பொருளாளராக அவர் தான் பார்த்துக்கொண்டார். என்னை கோபாலபுரத்தில் தூக்கி வளர்த்தவர்களில் டி ஆர் பாலுவும் ஒருவர். கலைஞர் கருணாநிதிக்கு தம்பி. ஸ்டாலினுக்கு தோழர். தலைமை என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்து முடிக்கக் கூடியவர் டி. ஆர் பாலு. உதாரணத்திற்கு நேற்று முன்தினம் நடந்த சேலம் திமுக இளைஞரணி மாநாட்டை பார்த்துருப்பீர்கள். தலைவரை 6 மணிக்கு பேச அழைத்திருந்தேன்.. மணி 5.30 ஆகிவிட்டது. இதனால் அரை மணி நேரத்திற்குள் 7 பேரை பேச வைக்க வேண்டும். ஒவ்வொருவராக வந்தனர். எல்லாரிடமும் 10 நிமிடங்கள் பேசுங்கள் என்றேன். ஆனால் ஒவ்வொருவரும் கூடுதல் நேரம் எடுத்தனர். ஆனால் இறுதியில் வந்த டி ஆர் பாலு ஸ்டாலின் பேசுவதற்கு நேரம் ஆகிவிட்டது என்பதற்காக வந்துருக்கிற எல்லாருக்கும் நன்றி வணக்கம் என்று சொல்லி வந்துவிட்டார். அந்த அளவிற்கு தலைவர் ஸ்டாலின் காத்து நிற்க கூடாது என்று நினைப்பவர். தலைவர் என்ன நினைக்கிறாரோ அதனை செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவர் டி ஆர் பாலு. திமுக இளைஞரணி மாநாட்டிற்கு டிஆர் பி ராஜா கொடுத்தது ரூ.25 லட்சம் நிதி கொடுத்தார். டி ஆர் பாலு கொடுத்தது 1 லட்சம் ரூபா. பரவாயில்லை.. நிதி தான் கொடுக்கவில்லை. ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். மாநாட்டில் கூட தலைவரிடம் இதே வேண்டுகோளை வைத்தேன். வரும் நாடாளுமன்ற தேர்தலிலே இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பை கொடுங்கள். தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் இவ்வாறு உதயநிதி பேசினார்..