தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி்யை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி நேற்று பிரசாரம் செய்தார். ஒரத்தநாடு, தஞ்சை கீழவாசல் ஆகிய பகுதியில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 13 கோடியே 5 ஆயிரம் இலவச பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறீங்க. இத்திட்டம் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதைப் பார்த்து கர்நாடக மாநிலத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் வெற்றி.
இதேபோல, புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 லட்சம் கல்லூரி மாணவிகள் மாதம் ரூ. ஆயிரம் பெறுகின்றனர். இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் மாணவிகள் பயனடைகின்றனர். இப்போ மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில்தான் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பார்த்து தெலங்கானா, கர்நாடக மாநிலங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைப் பார்த்து கனடா நாட்டிலும் அந்நாட்டு பிரதமர் இதை நடைமுறைப்படுத்தி உள்ளார்.
இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தமிழகத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைகின்றனர். இதில் சில குறைகள் உள்ளது, இது நிவர்த்தி செய்யப்படும். இந்த திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 4.22 லட்சம் பயன்பெற்று வருகின்றனர். நாம ஜிஎஸ்டி வரி கட்டுறோம். நாம ஒரு ரூபா மத்திய அரசுக்கு வரி கட்டினால் அவர்கள் நமக்கு 29 காசு தான் தருகிறார்கள்.
. உத்தரபிரதேசத்தில் ஒரு ரூபாய்க்கு 2 ரூபாய்க்கும் அதிகமாக திருப்பி கொடுக்கிறார்கள். திருப்பி கொடுக்கிறார். நம்மிடம் வரி வாங்கி, பாஜக ஆளும் மாநிலத்துக்கு கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் வெள்ளம் போன்ற பேரிடர் வந்தால் பணம் தர மறுக்கிறார்கள். இதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.
எங்களுக்கு நீட் தேர்வு வேணாம். பொதுத்தேர்வு 12ஆம் வகுப்பு தேர்வு போதும்னு சொன்னவர் கலைஞர் இன்னும் சொல்லப்போனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த வரைக்கும் தமிழ்நாட்டுக்குள்ள நீட் தேர்வு வரல. அந்த அம்மையார் இறந்த பிறகு இந்த அடிமைகள் எல்லாம் சேர்ந்து அதிமுக அடிமை அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து பாஜக உடைய அழுத்தத்தின் காரணமாக நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து 22 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இதில், தஞ்சாவூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முரசொலி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இன்று காலை பட்டுக்கோட்டையில் உதயநி்தி பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தி்ல் பழனிமாணிக்கம் எம்.பி, அமைச்சர் மகேஷ், மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி நிர்வாகி்கள் திரளாக கலந்து கொண்டனர்.