அரியலூர் நெல்லியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன்றம் – 2023 நிகழச்சியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது….
நம்முடைய வாழ்க்கை ஒரு மனிதனின் வாழ்க்கையை போல நம்முடன் மட்டும் முடிந்து விடாமல் நம்முடைய சமுதாயத்திற்கு பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக நேரு யுவ கேந்திரா என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் இளைஞர்கள் இணைத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இது போன்ற
நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்; இணைந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் படித்த இளைஞர்கள் திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்கள்.
மேலும், இன்று நடைபெறும் இளையோர் பாராளுமன்றம் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை வெளிபடுத்துவதுடன் வரும் காலத்தில் நல்ல வேலைக்கு சென்று தனது குடும்பத்தையும், நாட்டையும் முன்னேற்ற வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் .
தொடர்ந்து நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியும், தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டு உறுதிமொழியினையும் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர், இந்தியா – ஜி20 தலைமை- முக்கியத்துவம், சர்வதேச சிறுதானிய ஆண்டு – 2023, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அன்றாட வாழ்க்கை முறை என்ற தலைப்புகளில் கருத்தரங்குகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட இளையோர் அலுவலர் செ.கீர்த்தனா, நேஷனல் கல்விக்குழும நிறுவனத் தலைவர் அ.சிலம்புசெல்வன், நெல்லியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர்.இரா.கண்ணன் ஆகியோர் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.