தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 42 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி .சிவசங்கர் இன்று 14/12/2023 வழங்கினார். இந்த நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர். க. சொ. க. கண்ணன் , மாவட்ட வருவாய் அலுவலர் .எம். எஸ். கலைவாணி , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் ஆர். மோகன் , திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் .எஸ் சக்திவேல் , முதுநிலை துணை மேலாளர் . கோவிந்தராஜ் , பொது மேலாளர் நாசர்,துணை மேலாளர்கள் சதீஷ்குமார் , ரங்கராஜன், கார்த்திகேயன், ராமநாதன்,மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.