Skip to content

கால்நடை மருத்துவ தரவரிசை… முதலிடம் பிடித்த அரியலூர் மாணவர்…..அமைச்சர் சிவசங்கர் வாழ்த்து

  • by Authour

அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ராகுல் காந்த் .கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர்  ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க போக்குவரத்து துறை அமைச்சர் .சிவசங்கர்,  மாணவர் ராகுல் காந்த் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வும் அமைச்சருடன் சென்று மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மாணவர் ராகுல் காந்தின் தந்தை சைக்கிள் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். தாயார் குடும்பத் தலைவி . வறுமையான சூழ்நிலையிலும் மாணவர் ராகுல் காந்த் சிறப்பாக கல்வி கற்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 588/600 மதிப்பெண்கள் பெற்றார். மேலும், மாணவர் ராகுல் காந்த் குடும்ப சூழ்நிலை காரணமாக  நீட் தேர்வுக்கு ஆயத்தம் செய்ய முடியாத நிலையில்   கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்தார்.

கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். மேற்படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவர் ராகுல்

காந்த்க்கு,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், மாணவர் ராகுல் காந்த்  கல்வி மீதான ஆர்வமும், அவரின் உழைப்பும் போற்ற தக்கது அவரை நான் பாராட்டுகிறேன் போற்றுகிறேன். கல்வியின் முக்கியத்துவத்தினை நான் ஒவ்வொரு முறை வழியுறுத்தி பேசுவதும், நம்முடைய நீட் எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகத் தான். அவருக்கு உதவ நமது அரசு இருக்கிறது என தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாணவர் ராகுல்காந்த்,  உயர்கல்வி படிப்பதற்குத் தேவையான உதவிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக மாணவர் ராகுல் காந்த் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். அப்போது  தாசில்தார் கண்ணன் மற்றும் மாணவனின் பெற்றோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!