Skip to content
Home » ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டவரா?

ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டவரா?

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாகனத்தில் சென்றார். அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது, திடீரென உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர் , மந்திரி மீது அதிரடியாக துப்பாக்கியால் சுட்டார். இதில், மந்திரியின் நெஞ்சு பகுதியில் குண்டு துளைத்தது.

அவரை உடனடியாக  புவனேஸ்வர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி  மந்திரி நபா கிஷோர் தாஸ் இறந்தார். மந்திரியின் பாதுகாப்புக்காக சென்ற காவல் உயரதிகாரியான கோபால் தாஸ் என்பவர், மிக நெருக்கத்தில் திடீரென நான்கைந்து முறை துப்பாக்கியால் மந்திரியை நோக்கி சுட்டது சுற்றியிருந்தவர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.  சப் இன்ஸ்பெக்டர்  கோபால் தாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே கோபால்தாசின் மனைவி  ஜெயந்தி தாஸ் கூறும்போது, எனது கணவர் மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். அமைச்சருடன் அவருக்கு எந்த விரோதமும் இல்லை. சம்பவத்தன்று காலை வட  மகள்களுடன் அவர் வீடியோ காலில் பேசினார்.  இந்த சம்பவத்தில் உண்மை வெளிவர நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

இந்த சம்பவத்தில் இறந்த அமைச்சர் குடும்பத்துக்கு பிரதர் மோடி, ஒடிசா முதல்வர் பிஜூபட்நாயக், தமிழக முதல்வர்  ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!