கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் அளிக்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் செய்த மனுகள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடிய போது உடல்நிலை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கைது செய்யப்பட்டு சுமார் 200 ஆகும் நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் குறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று தீர்ப்பு வழங்குகிறார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 22 ஆம் தேதி வரை 15வது முறையாக நீடித்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதனையடுத்து அமைச்சர் ஜாமீன் மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.. சுமார் 215 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல்களை தவிர உறவினர்கள் உள்பட வெளி நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது..
கைதாகி 215 நாட்கள் ஆகியும் வெளி ஆட்களை சந்திக்கல … இன்று ஜாமீன்?
- by Authour
