கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். அங்கு வருகை புரிந்த அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இளைஞர்கள், மற்றும் பெண்கள் மேலும் அவரது குடும்பத்தினர் செல்பி எடுத்துக்கொண்டனர். இதில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
கலந்துகொண்டு முகாம்களை பார்வையிட்டார் பின்னர் முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.