அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை காவல் முடிந்து, தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என் ஆர் இளங்கோ ஆஜராகி வாதிட்டனர். அப்போது அமலாக்கத்துறையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட பணபரிமாற்றத்திற்கு எதிராக எந்த ஆதாரங்களும் குறிப்பிடப்படவில்லை. பாஜக அரசின் அழுத்தம் காரணமாகவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டனர். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி அல்லி இந்த மனு மீதான தீர்ப்பு 20ம் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். ல் நீதிபதி தெரிவித்துள்ளார்.
