தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த
வகையில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் . மேலும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் எம்பி ஆ.ராசா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்கள் இரங்கல் தெரிவித்தனர்.