Skip to content
Home » மாவட்ட அளவிலான கலைத்திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு…

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசு…

  • by Senthil

கரூர் காந்திகிராமம் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசளித்து கௌரவித்தார்கள்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்… தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை துறைகள் இருந்தாலும் கூட பள்ளிக்கல்வித்துறைக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து அதற்கான நிதிகளையும் ஒதுக்கி அதற்கான சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.  குறிப்பாக இந்த ஒன்றரை ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறைகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கி புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் என தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி இருக்கின்றார்கள். இக்கலை திருவிழா என்பது கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிகளை இந்த திருவிழாக்கள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறக்கூடிய வட்டார அளவில் மற்றும் மாவட்ட

அளவில் மற்றும் தொடர்ச்சியாக பல இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியிலேயே மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பாராட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் நடத்தும் பொழுது வெற்றி பெற்று இருக்கின்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் அனைவர் சார்பாகவும் தமிழகத்தினுடைய முதலமைச்சர் அவர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 470 மாணவ, மாணவியர்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரொக்கப்பணம் ரூ.500 உடன் பரிசளித்து கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தலைமையில் நடைபெற்றது.  எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி , கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!