அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் உள்ளார்.
செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு, அவருக்கு ஜாமீன் கோரி 2 முறை தாக்கல்செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதி பதி அல்லி தள்ளுபடி செய்தார். இந்த நிலையில், 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பினை நீதிபதி அல்லி பிறப்பித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை இன்று தள்ளுபடி செய்தது நீதிமன்றம் .