அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் அமைச்சர் முழுமையாக குணமடையவில்லை எனவே ஜாமீன் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டதுடன், ஸ்டான்லி மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையும் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தது. எனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது 16ம் தேதி தெரியவரும். ஏற்கனவே ஜாமீன் மனுவை 2 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.