தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது, தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது.
மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது, புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் ஏற்றுகொள்ளமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.