கோவையில் புதிய எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழா, கலைஞர் நூற்றாண்டு நூலக அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 5, 6ம் தேதிகளில் வருகை தருகிறார். இதையொட்டி முதல்வர் விழா நடைபெறும் இடங்களை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமையுள்ள காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.