அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியது. எனவே 3வது நீதிபதி நியமித்து இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில், ஆட்கொணர்வு மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு மாதக்கணக்கில் நடந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய முடியாது . செந்தில் பாலாஜி மிகவும் செல்வாக்கு படைத்தவர். அவர் மருத்துவமனையில் இருப்பதால் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என்று வாதிட்டார்.
இதைக்கேட்ட கேட்ட நீதிபதி, சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கை 3வது நீதிபதி விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி ஏற்பாடு செய்ய வேண்டும். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் செந்தில் பாலாஜியை எப்படி விடுவிக்க முடியும் என்ற நீதிபதி வழக்கை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.