அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார். அவரது காவல் செப்டம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
