Skip to content

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் பெற வேண்டி சிறப்பு யாகம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது ஆதரவாளர்கள் நாள்தோறும் பூஜைகள் செய்வது, நேர்த்தி கடன் செலுத்துவது என பல வேண்டுதல்களை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பரணி பால்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகத்தை தொடர்ந்து

மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதில் அறங்காவலர் குழுவினருடன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மண்டல தலைவர், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *