Skip to content
Home » லேசர் தொழில்நுட்பத்துடன் முதல் ஐமேக்ஸ் தியேட்டர்… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்….

லேசர் தொழில்நுட்பத்துடன் முதல் ஐமேக்ஸ் தியேட்டர்… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்….

  • by Authour

தென்னிந்தியாவில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய – முதல் ஐமேக்ஸ் திரையரங்கை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் மிக தென்னிந்திய அளவில் முதன் முறையாக லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் ஐமேக்ஸ் திரையரங்கம் கோவை அவினாசி சாலை விமான நிலையம் அருகே அறிமுகமாகி உள்ளது.

ப்ராட்வே சினிமாஸ் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒன்பது திரைகளை கொண்ட நவீன மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்கை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.

இந்த புதிய ஐமேக்ஸ் திரை, அற்புதமான லேசர் புரஜக்சன். 12-சேனல் கொண்ட ஒலி அமைப்பு. துல்லியமான கிரிஸ்டல் க்ளியர் படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட துல்லியமான ஒலியுடன் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ப்ராட்வே மெகாப்ளக்ஸ் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் சதீஷ் குமார் மற்றும் இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் கூறுகையில், ப்ராட்வே மெகாப்ளெக்ஸ் நாட்டில் வெள்ளித் திரை அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடன்,

பொழுதுபோக்கிற்கான சிறந்த இடத்தை வழங்கும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டது.

ஐமேக்ஸ் லேசர் EPIQ பிரீமியம் பெரிய வடிவம் மற்றும் கோல்ட் ஸ்கிரீன் திரைகள் மூலம் ப்ராட்வே சினிமாஸ் மிகச்சிறந்த பொழுது போக்கு அனுபவத்தை வழங்கும் எனவும்,மேலும்,EPIQ பிரீமியம் எனும் பெரிய வடிவம், அதன் அதிவேக தொழில்நுட்பத்துடன், திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். அனைத்து திரைகளும் ஸ்டேடியம் போன்ற இருக்கைகளுடன், பிரம்மாண்டமான வெள்ளித் திரை அனுபவத்தை, சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

திரையரங்க அனுபத்தில் புதிய மாற்றமாக,ப்ராட்வே வரும் மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை கொண்டாட ப்ராட்வே 9-ஸ்கிரீன் மல்டிபிளக்ஸ், 15 க்கும் அதிகமான சில்லறை விற்பனை கடைகள், 2 மாடி கேமிங் அமைப்பு, 38 தரமான சிறு சிறு ஃபேஷன் உடை நிறுவனங்கள், ஹோட்டல்கள், பார், உணவகங்கள் மற்றும் விருந்து மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான இடமாக ப்ராட்வே செயல்பட உள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கட்டிட வடிவமைப்பாளர் ஜியோ வானிக் கேஸ்ட்ரால் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *