Skip to content

உள்ளூரிலும் தோல்வி, வெளியூரிலும் தோல்வி.. அமைச்சர் செந்தில்பாலாஜி “பஞ்ச்”

  • by Authour

கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் .. “சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை. எனவே சில கருத்துக்களை கூறி வருகிறார்கள். உள்ளூரில் நின்றாலும் தோல்வி, வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள், அவர்களுடைய இருப்பை காட்டுவதற்காக அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள். அவதூறு கருத்துக்களை பற்றி கவலைப்படுவதற்கு அவசியம் இல்லை. அரசியல் என்பது நாகரிகமாக இருக்க வேண்டும். அரசியலில் இருக்கக்கூடியவர்கள் பக்குவப்பட்டவர்களாக இருக்க வேண்டும். கருத்துக்கள் தெரிவிக்கும் பொழுது யாரையும் பழிச்சொல் பேசுவது போல் இல்லாமல் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் அது போன்ற வார்த்தைகளை தான் பயன்படுத்துவார்கள். பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அனைத்து துறைகளும் மழையை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளது. விழுப்புரம், கடலூரில் ஏற்பட்ட பாதிப்புகள் இரண்டு நாட்களில் சகஜ நிலைக்கு திரும்ப நின்ற அளவிற்கு அரசின் இயந்திரம் சிறப்பாக செயல்பட்டது”இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரான அரவாக்குறிச்சி தொகுதியில் தோல்விையை தழுவிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் கோவை தொகுதியிலும் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடதக்கது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!