கரூர் மாவட்டம் செங்காட்டானூர் அதிமுக கிளைச் செயலாளர் கருப்பண்ணன், செல்லரபாளையம் பொன்னுசாமி, சக்தி நகர் கிளைச் செயலாளர் தர்மராஜ், செல்லரபாளையம் ஏ.டி.காலனி குமார், லோகநாதன் உட்பட 7 பேர் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக்கொண்டனர். அதேபோல் காக்காவாடி இந்திரா காலனி அதிமுக கிளைக் கழக செயலாளர் சுப்பிரமணி, பாஜக காக்காவடி ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன், பாஜக மாவட்ட விளையாட்டு அணி துணைத்தலைவர், புத்தம்பூர் சமத்துபுரம் கார்த்தி ஆகியோர் தலைமையில் காக்காவடி எம்.தினேஷ், எம்.கே.கணேஷ் மூர்த்தி, மலைக்கோவிலூர் அருள் ஆகியோரின் ஏற்பாட்டில், 200க்கும் அதிகமான அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் தங்களை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
ஏமூர் நடுப்பாளையம் திரு.எஸ்.கண்ணதாசன், ஏமூர்புதூர் திரு. சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் 30 பேர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அதிமுக மத்திய வடக்கு பகுதி அவைத்தலைவர் திரு. பி.செந்தில்குமார், அதிமுக 22வது வார்டு செயலாளர் திரு. தனபால் உட்பட 5 பேர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவை சேர்ந்த கரூர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திரு.கமலக்கண்ணன், கரூர் தெற்கு நகர மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி.ஜோதி ஆகியோர் தலைமையில், அதிமுக கரூர் தெற்கு நகர மாணவர் அணி துணை செயலாளர் திரு.ஆர்.பிரவீன், 44வது வார்டு துணை செயலாளர் திரு.விக்டோரியா உட்பட 50 பேர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.