கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்து பாளையம் கிளை நூலகத்திற்கு கூடுதல் கட்டிடம் பணி, மாநகராட்சி துவக்க பள்ளியில் கழிப்பிடம் அமைக்கும் பணி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடத்தை பராமரித்து செய்யும் பணி மற்றும் சமையல் அறை புதியதாக அமைத்தல், ஜெயபிரகாஷ் பள்ளியில் சுற்றுச்சுவர் கழிப்பிடம் மற்றும் ஃபேவர் பிளாக் அமைக்கும் பணி, ஜெயபிரகாஷ் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கழிப்பிடம் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் ஃபேவர் பிளாக் அமைக்கும் பணி, பசுபதிபாளையம் நடுநிலை பள்ளியில் பள்ளி கட்டிடம் பராமரித்து பணி செய்தல் மற்றும் புதிய கழிப்பிடம் கட்டுதல், புலியூர் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் வட்ட மாநிலவரி அலுவலர் அலுவலகம் கட்டுதல் உள்ளிட்ட சுமார் ரூ 3. 60 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். காலை 6.15 மணிக்கு துவங்கி மின்னல்
வேகத்தில் 6 நிகழ்ச்சிகளில் அமைச்சர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்டக்கலெக்டர் தங்கவேல் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் இளங்கோ, மாணிக்கம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கரூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கோவை செல்லும் அமைச்சர் செந்தில்பாலாஜி அங்கு திமுக வழக்கறிஞர் அணி சார்பிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். மீண்டும் கோவையில் இருந்து கிளம்பி கரூர் வரும் அமைச்சர் மதியம் 2.30 மணிக்கு கலைத்திருவிழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.. அமைச்சர் செந்தில்பாலாஜியின் இந்த சுற்றுப்பயணத்திட்டத்தை மிகவும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் அதிகாரிகள்..
