தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கோவை வந்தார். அவரை வரவேற்க மக்கள் விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற விளாங்குறிச்சி வரை 4 கி.மீ. தூரம் வரிசையில் நின்று வரவேற்றனர். முதல்வரின் வாகனம் இந்த4 கி.மீ. தூரத்தை கடக்க 1 மணி நேரம் பிடித்தது. இதை தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் பதிவிட்டு, விழா ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டினார்.
இன்று காலை கோவையில் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாவட்ட பொறுப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி குறிப்பிட்டு பேசும்போது, செந்தில் பாலாஜி கம் பேக் கொடுத்து உள்ளார். அவர் இன்னும் வேகமாக செயல்படுவார் என பாராட்டி பேசினார். 2 நாள் விழாவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. முதல்வர் மகிழ்ச்சியுடன் சென்னை புறப்பட்டார். முதல்வர் தன்னை பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தடைகள் வந்த போதெல்லாம் தாயுமானவராய் எனை தாங்கிய, கழகத்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் இந்த அளவற்ற அன்பிற்கு எந்நாளும் கடமைப்பட்டு உள்ளேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க களப்பணியாற்றி, நலத்திட்ட பணிகளைத் வேகப்படுத்தி, கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.