சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார். அப்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு, திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் , சாட்டையால் அடித்துக்கொண்டவர்கள், சோதனை என்ற பெயரில் அவதூறு பரப்புகிறார்கள் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: நம்முடைய தமிழ்நாட்டின் ஒப்பற்ற தளபதி அவர்களுடைய 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், மக்களிடத்தல் எப்படியாவது ஓர் அவப்பெயரை உருவாக்க வேண்டும், என்ற கெட்ட நோக்கத்தோடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மக்களிடத்தில் ஒரு குழப்பத்தை உருவாக்க வேண்டுமென்று பூதக்கண்ணாடி போட்டு தேடிப்பார்த்தார்கள். ஒன்றுமே கிடைக்கவில்லை, கொஞ்சநேரம் சாட்டையால்கூட அடித்துக்கொண்டார்கள். அப்போதும் எதுவுமே கிடைக்கவில்லை.
கடைசியாக அவர்கள் கையில் இருக்க கூடிய ஒரு துறையை கையில் வைத்துக்கொண்டு, சோதை என்ற பெயரில் சம்பந்தமில்லாதவர்களின் இடத்திலேல்லாம் சோதனை நடத்தி அந்த துறைக்கும், அந்த நபர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அவர்களிடத்திலேல்லாம் சோதனை நடத்தி கடைசியாக ஒரு பத்திரிகை செய்தி, மார்ச் 14ம் தேதி பட்ஜெட் கூட்டம் தொடங்குகிறது என்றால் 13ம் தேதி மாலை அவசரஅவசரமாக ஒரு பத்திரிகை செய்தி கொடுக்கிறார்கள்.
காரணம் என்னவென்றால், நிதிநிலை அறிக்கையில் வரக்கூடிய திட் டங்கள், நாட்டு மக்களிடத் தில் சென்றுவிடக் கூடாது; முதலமைச்சருக்கு இருக்கக்கூ டிய நற்பெயரை பொது மக் கள் பாராட்டிவிடக் கூடாது என்ற குறுகிய மனப்பான்மை யோடு அவசர அவசரமாக அந்தப் பத்திரிகை செய்தி வருகிறது.
அந்தப் பத்திரிகை செய்தி வருவதற்கு முன்பாகவே அந் தக் கட்சியினுடைய தலை வர், அந்த எண்ணிக்கையை சொல்கிறார். ஒரு நாள் முன் னாடி சொல்கிற செய்தி, அடுத்தநாள் பத்திரிகை செய் தியாக வருகிறது. நாங்கள் இன்றுவரை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். செய்தி வந்த பிறகு அடுத்த நாளும் நாங்கள் கேட்டோம்.
எதன் அடிப்படையில் அந்தச் சோதனை நடைபெற்றது? எந்த முதல் தகவல் அறிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டது? எந்த ஆண்டு பதிவு செய்யப் பட்ட முதல் தகவல் அறிக்கை? இதுவரை அதற்கு விளக்கமில்லை. இதுவரை யில் அதற்கு விளக்கமில்லை. ஒரே ஒரு கருத்தை மட்டும் அவர்கள் எடுத்துச் செல்கிறார்கள்.
என்னவென் றால், 4 ஆண்டு காலம் செய் யப்பட்ட சாதனை, இந்த பட்ஜெட்டில் முதலமைச்சர் அவர்கள் வழங்கியிருக்கிற வரலாற்று சிறப்புமிக்க திட் டங்கள் ஆகியவை மக்களி டத்தில் சென்றுவிடக்கூடாது என்ற குறுகிய மனப்பான்மை யோடு அரசின்மீது அவதூறு களை பரப்பலாம். குறுகிய நோக்கத்தோடு மக்களிடத் தில் ஒரு மோசமான சூழ்நி லையை எடுத்துச்செல்லலாம் என்று அவர்கள் எண்ணு கின்ற எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. (மேசையைத் தட் டும் ஒலி) அந்தக் கணக்கு அவர்களுடைய மனக் சுணக்கு. உறுப்பினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
2021 ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய தேர்தல் வாக்குறுதி யில் TASMAC குறித்து எந்தவி தமான வாக்குறுதியும் இடம் பெறவில்லை. முதலில் எடுத்து படித்துப் பாருங்கள். படிப்படியாகக் குறைப் போம் என்று சொன்னதாகச் றாது. சொல்கிறார்கள். அப்படிப் பட்டட எந்த வாக்குறுதியும்அதில் இல்லை.
இருந்தபோ தும்கூட, தமிழ்நாட்டினு டைய முதலமைச்சர் தளபதி அவர்கள் மக்கள் நலன் கருதி 603 கடைகளை குறைத்திரு க்கின்றார். அறிவிப்பில் 500 சுடைகள்தான் சொல்லப்பட் டிருந்தது. ஆனால், 103 கடை கள் பொது மக்கள் வேண்டா மென்று சொன்ன இடத்தில் பள்ளி, கல்லூரிகள், ஆலயங் கள் இருந்த 103 கடைகள் மூடப்பட்டு, மொத்தமாக 603 கடைகள் மூடப்பட்டி ருக்கின்றன.
எனவே, அரசு என்பது சட்ட ரீதியான நட வடிக்கை எடுத்து, படிப்படி யாசு முழுவதுமாக இரும்புக் கரம் கொண்டு அடக்கக்கூ டிய ஓர் அரசை முதலமைச்சர் அவர்கள், திராவிட மாடல் அரசை வழிநடத்திக் கொண் டிருக்கின்றார்கள். எனவே, உறுப்பினர் அவர்கள் சுட்டிக் காட்டியதைப் போல், எப்ப டியாவது அவதூறுகளைப் பரப்பி, மக்களிடத்தில் ஒரு தீய கருத்தைக் கொண்டு சென்றுவிடலாம் என்று நினைக்கின்றார்கள். ஒருபோ தும் அது ஈடேறாது. ஒருபோ தும் நிறைவேறாது.
மீண்டும் ஒரு முறை கேட்கிறேன். எந்த முதல் தகவல் அறிக்கை? எந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட தகவல் அறிக்கை என்பதை யெல்லாம் எடுத்துச் சொல் லாமல், சோதனை என்ற பெயரில், அரசின்மீது அவ தூறை பரப்புவதற்கு முயற்சி செய்வது ஒருபோதும் ஈடேறாது.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.