திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் திமுக சட்டத்துறை மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்றார். தலைமை கழக வழக்கறிஞர் சரவணன், சட்டத்துறை இணைச்செயலாளர்கள் கேஎம்.தண்டபாணி, அருள்மொழி, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, தொஅ.ரவி, தளபதி முருகேசன், மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மறைந்த மூத்த வழக்கறிஞர் AK.ராஜேந்திரன் திருவுருவ படத்தை, அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், சட்டத்துறை செயலாளர் என்ஆர்.இளங்கோ திறந்து வைத்தார்.
மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..
- by Authour
