கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரூ 9.67 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக் க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடத்தினை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 11 மணியளவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாதிரி விடுதி கட்டடம் மற்றும் ரூ 9.67 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைக்கும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: தமிழகத்தை விளையாட்டு தலைநகராக்கும் வகையில் விளையாட்டு துறை அமைச்சர் செயல்பட்டு வருகின்றார்.ஹாக்கி வீரர்கள் கோரிக்கையை ஏற்று ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். ரூ900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகின்றது. புதிய பணிகளும் ஆய்வு செய்யப்படுகின்றது. கோவையின் வளர்ச்சிக்காக ரூ200 கோடி ரூபாயினை முதல்வர் அறிவித்துள்ளார். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும் .ஏற்கனவே முதல்வர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.