அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கோரி செசன்ஸ் கோர்ட், ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் என அனைத்து கோர்ட்டுகளிலும் மனு தாக்கல் செய்தபோதும் ஜாமீன் கிடைக்கவில்லை.
அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று 13வது முறையாக அவருக்கு காவல் நீடிக்கப்பட்டு உள்ளது. காணொலி மூலம் ஆஜரான அமைச்சருக்கு ஜனவரி 4ம் தேதி வரை காவலை நீடித்து செசன்ஸ் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.