அமைச்சர் செந்தில் பாலாஜி , அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அமர்வு நீதிமன்றம், சிறப்பு கோர்ட்டை அணுகும்படி கூறியது. அதன்படி சிறப்பு கோர்ட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தபோது ஐகோர்ட்டை அணுகும்படி கூறினர்.
ஐகோர்ட்டுக்கு சென்றபோது, தலைமை நீதிபதியை அணுகும்படி கூறப்பட்டது. இந்த நிலையில் தலைமை நீதிபதி அறிவுரையின்பேரில் ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோரை கொண்ட அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் கோர்ட் எது என்பதை தெரிவிக்க வேண்டும் என கோரி இருந்தனர்.
இந்த மனுமீது இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் ஆகியோர் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. அத்துடன் பி.எம்.எல்.ஏ. சட்டத்தின்படி முதன்மை அமர்வு நீதிமன்றத்தையே சிறப்பு நீதிமன்றமாக மாற்றியும், ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு என கூறி கோர்ட், இந்த வழக்கை விரைந்து விசாரிக்கும்படியும் அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.