தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார். தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், பி.கே.சேகர்பாபு முன்னிலையில், கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழா
நடைபெற்றது. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொள்ள மிகச் சிறப்பாக நடைபெற்றது. உடன் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி I.A.S. பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் அண்ணன் கே.ஈஸ்வரசாமி, கோவை மேயர் ரங்கநாயகி, தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்..