அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி 127 தினங்களாக புழல் சிறையில் உள்ளார். அவருக்கு செசன்ஸ் கோர்ட், சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வக்கீல் ராம்சங்கர் இன்று உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மேல் முறையீடு செய்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இருதய ஆபரேசன் செய்தவர். எனவே அவரது உடல் நலனை கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவை நாளைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வக்கீல் வேண்டுகோளை வைத்தார். அதை நீதிபதி ஏற்க மறுத்த நீதிபதி வரும் 30ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.