மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூா் வந்தார். அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர்.
தொழில் அதிபர் அதானி மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
அதானி குழுமத்திற்கும் தமிழக அரசுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவிதமான ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை. மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ள வில்லை. சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தி நிறுவனங்கள் இது தொடர்பாக தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறது.
இது தொடர்பான எந்த விதமான கருத்துக்களையும் என்னிடம் நேரடியாகவும் அல்லது மின்சாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு பதிவிட வேண்டும் . கரூர் பஸ் நிலையம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதால் பணி தொடங்கவில்லை. கரூர் டைடல் பார்க் அமைய உள்ள இடத்திற்கான இடம் இன்னும் 10 நாளில் தேர்வு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.