கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். இதில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றியம், நகரக் கழக நிர்வாகிகளுக்கு விண்ணப்பித்து இருக்கலாம், ஒருவரைத் தான்
பொறுப்பாளராக இருக்க முடியும், பதவி கிடைக்காதவர்களுக்கு பல்வேறு அணியில் பொறுப்பாளராக பொறுப்பு வழங்கப்படும். விருப்பப் படக் கூடியவர்கள் மாவட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும், ஆலோசித்து அவர்களுக்கு பதவி வழங்க தளபதியிடம் பரிந்துரைக்கப்படும்.16ம் தேதி பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற உள்ளது. இதில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொள்ள உள்ளார்.கரூர் மாவட்டத்தில் 1047 வாக்குச்சாவடிகளில் பேராசிரியர் படம் வைத்து புகழ் அஞ்சலி செலுத்த வேண்டும். சாதாரண தொண்டராக இருந்தாலும், அவர் நமது கழகத்திற்காக பணியாற்றக் கூடியவர்கள். அவர்களையும் மதித்து நடக்க வேண்டும். BLA 2 நியமன பொறுப்பாளர்கள் 100 வாக்காளர்களிடம் நன்மதிப்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும், பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்க கூடாது. தொடர் வெற்றிகளை பெற கட்டுப்பாடுகள் மற்றும் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். நகர்புர உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றோமோ அதே போன்று நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.