அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை இன்று விசாரித்த நீதிபதி அல்லி, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.